Monday, October 15, 2007

தலைப்பிரசவம்



ஏரிமேட்டிலும் களத்துமேட்டிலும்
கைபிசைந்து

வயல்வரப்பில் வாடைக்காற்றில்
தலைப்பு தேடி

பனிஇரவில் பலகனவில்
வரியமைத்து

இனிய
நினைவுகளொடு
இதயபேனா எழுதியது

என்
முதற்கவிதையை....

Wednesday, October 3, 2007

தவிப்பு

இதயம்
பேச நினைக்கிறது

உன்னை பார்க்கும்போது

உதடு
பேச மறுக்கிறது.

Monday, October 1, 2007

காதலிக்கப்படாதவன்


என்
இதயக்கோபுரத்தின்
மாடக்கதவுகள்
திறந்தே கிடக்கின்றன.

அதில்
புறாக்கள் மட்டும்
அமருவதேயில்லை.