
உன்னோடு பேசித்திரிந்த
காலங்களின்
நினைவுகளை அழிக்க
முற்படுகிறேன்.
என்னால் முடிந்தவொன்றை
என் கனவுகள்
சிதைத்துவிடுகின்றன
ஒவ்வொரு நாளும்....
என் தனிமையின்
அநேக நேரங்கள்
உன்னைப்பற்றிய
சிந்தனைகளால்
நிரப்பப்பட்டு விடுகின்றன....
நீ என்னோடு வாழ்வதற்காய்
கட்டி வைத்திருந்த
மனக்கோட்டை முற்றிலும்
இடிந்த பின்னும்
தாய்மடி தேடும்
குழந்தை போல்
உன் நினைவுகள் நோக்கியே
என் பயணம்
நீள்கின்றது!
ஒருவேளை
என் நினைவுகள்
உனக்கும் மீதமிருந்தால்
ஒரு வேண்டுகோள்!
என் இதயத்தில்
கல்வெட்டாய் கிடக்கும்
உன் நினைவுகளை
அழிக்க ஏதாவதொரு
வழி செய்துவிட்டு
என்னை மறந்துபோ!!!!
காலங்களின்
நினைவுகளை அழிக்க
முற்படுகிறேன்.
என்னால் முடிந்தவொன்றை
என் கனவுகள்
சிதைத்துவிடுகின்றன
ஒவ்வொரு நாளும்....
என் தனிமையின்
அநேக நேரங்கள்
உன்னைப்பற்றிய
சிந்தனைகளால்
நிரப்பப்பட்டு விடுகின்றன....
நீ என்னோடு வாழ்வதற்காய்
கட்டி வைத்திருந்த
மனக்கோட்டை முற்றிலும்
இடிந்த பின்னும்
தாய்மடி தேடும்
குழந்தை போல்
உன் நினைவுகள் நோக்கியே
என் பயணம்
நீள்கின்றது!
ஒருவேளை
என் நினைவுகள்
உனக்கும் மீதமிருந்தால்
ஒரு வேண்டுகோள்!
என் இதயத்தில்
கல்வெட்டாய் கிடக்கும்
உன் நினைவுகளை
அழிக்க ஏதாவதொரு
வழி செய்துவிட்டு
என்னை மறந்துபோ!!!!