Tuesday, October 7, 2008

எஞ்சிய நினைவுகள்


கலைந்துபோன
கனவுகளின்
மிச்சங்களில் எப்போதேனும்
அவளின் நினைவுத்தீற்றல்கள்.

எந்திர வாழ்க்கையினூடே
தொலைந்துபோனவை
பற்றிய சிறுகுறிப்புகள்
எங்கேனும் தென்பட்டுத்தொலைக்கின்றன.

நீண்ட பயணங்களிலும்
நகரத்துத்தெருக்களிலும்
இளவயதுப்பெண்ணொருத்தி
அவளை ஞாபகப்படுத்திச்செல்கிறாள்.

அலைபேசியின்
அதிகாலை அழைப்புகள்...
நீண்டதொரு தொலைபேசி
உரையாடல்...
அன்னையின்
அன்பு விசாரிப்புகள் என
ஏதாவதொன்று
அவளை என் எண்ணத்தில்
புகுத்திச்செல்கின்றது.

ஒருவேளை
நான் இறந்துபோகும்போது
அவளை
மறந்துபோகலாம்!

No comments: